செய்திகள்
விபத்து

வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2021-05-13 22:36 IST   |   Update On 2021-05-13 22:36:00 IST
வளநாடு அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
துவரங்குறிச்சி:

வளநாட்டை அடுத்த கோவில்பட்டியில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சுமார் 60 வயது மூதாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தவழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 

இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News