செய்திகள்
வைத்திலிங்கம், முனுசாமி

முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்

Published On 2021-05-10 10:46 GMT   |   Update On 2021-05-10 10:46 GMT
அதிமுக எம்எல்ஏ-க்கள் முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக-வின் முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். முனுசாமி வேப்பனஹல்லி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருவரும் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளனர். நாளை வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Tags:    

Similar News