செய்திகள்
முத்தியால்பேட்டை போலீஸ்நிலையம் முன்பு பந்தல் அமைந்து போலீசார் புகார் மனு வாங்கிய காட்சி.

காவல்துறையை கலங்கடிக்கும் தொற்று- மேலும் 19 போலீசாருக்கு கொரோனா

Published On 2021-05-10 02:35 GMT   |   Update On 2021-05-10 02:35 GMT
போலீசாருக்கு கொரோனா பரவி வருவதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு வாங்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுவையில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு கடந்த 28-ந் தேதி போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் நாள்தோறும் போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 171 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் 19 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே போலீசாருக்கு கொரோனா பரவி வருவதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு வாங்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையம் முன்பு பந்தல் அமைத்து போலீஸ்காரர்கள் புகார் மனு பெறுகின்றனர்.
Tags:    

Similar News