செய்திகள்
சீமான்

இறையன்பு, உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப் பணிகளில் முன்னிறுத்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது- சீமான்

Published On 2021-05-09 16:50 IST   |   Update On 2021-05-09 16:50:00 IST
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்புக்கும், முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரனுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்புக்கும், முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.


மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல்கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப் பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Similar News