செய்திகள்
கோப்பு படம்.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதியில்லை- தமிழக அரசு

Published On 2021-04-24 19:03 IST   |   Update On 2021-04-24 19:03:00 IST
ஏப்.26-ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.26ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

Similar News