செய்திகள்
எச் ராஜா

வாக்குப்பதிவு எந்திரம் குறித்து திமுக தேவையில்லாமல் பேசுகிறது- எச்.ராஜா

Published On 2021-04-23 04:40 GMT   |   Update On 2021-04-23 04:40 GMT
ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச் .ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் தி.மு.க. தோற்றால் ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவே வாக்கு பதிவு எந்திரம் பாதுகாப்பு குறித்து தேவை இல்லாமல் பேசுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வராது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

தேங்காய் நார் ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரியை கண்டால், பெண் காவலர்கள் பயன்படுத்தும் மொபைல் டாய்லட் கண்டெய்னரை கண்டால் இதிலிருந்து வாக்குப்பெட்டி எந்திரங்களை ஹேக் செய்து விடுவார்கள் என்றெல்லாம் பேசுவது அபாண்டம்.



வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகே உள்ள வீடுகளில் உள்ள டிஷ் ஆண்டனாவை கழட்ட கூறுகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை விஞ்ஞான அறிவு எதுவும் இல்லை. வாக்கு பெட்டியில் ஹேக் செய்ய முடியும் என்றால் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை தி.மு.க. எப்படி பெற முடிந்தது.

வாக்கு மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ள நிலையில், நாளை தோற்றுப்போனால் கூறுவதற்காக இதுபோல் பேசி வருகின்றனர்.

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளைப் பரப்பும் மன்சூர் அலிகானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News