செய்திகள்
கோப்புபடம்

முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.37½ லட்சம் அபராதம் வசூல்

Published On 2021-04-21 17:03 GMT   |   Update On 2021-04-21 17:03 GMT
சிவகங்கை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.37½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் அதிகளவு பரவுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் நலன் கருதி நோய்த்தொற்று தடுப்பு தொடர்பாக ஒவ்வொருவரும் தற்பாதுகாப்பிற்காக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததற்காக வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களிடம் இருந்து பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என மேற்கண்ட துறைகள் ஒருங்கிணைந்து அபராதம் வசூலித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொடங்கிய 2020-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அரசு விதிமுறை கடைபிடிக்காமல் சென்றதற்காக சுகாதாரத்துறையின் மூலம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரமும், காவல்துறையின் மூலம் ரூ.28 லட்சத்து 20ஆயிரமும், வருவாய்த்துறையின் மூலம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 200-ம், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.14 ஆயிரத்து 100-ம், பேரூராட்சிகள் நிர்வாகம் மூலம் ரூ.45 ஆயிரத்து 200-ம், நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 600-ம் சேர்த்து மொத்தம் ரூ.37 லட்சத்து 59 ஆயிரத்து 100 அபராத தொகையாக பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறினார்.

Tags:    

Similar News