செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்

Published On 2021-04-20 14:20 IST   |   Update On 2021-04-20 14:20:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியில் வரும் போது பொதுமக்கள் முககவசம் அணியாமல் வந்தால் ரூ.200 அபராதம் விதிப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தினமும் போலீசார் ஆங்காங்கே நின்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்ததில் ஒரே நாளில் மட்டும் ரூ.1 லட்சம் வரை வசூலானதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Similar News