செய்திகள்
மும்பையிலிருந்து காரைக்கால் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது எடுத்த படம்.

மும்பையில் இருந்து காரைக்காலுக்கு ரெயிலில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-20 03:19 GMT   |   Update On 2021-04-20 03:19 GMT
மும்பையில் இருந்து காரைக்காலுக்கு ரெயிலில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் முகக்கவசம்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நலவழித்துறை வலியுறுத்தியுள்ளது. இதை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மும்பையில் இருந்து காரைக்கால் வரை லோக்மானிய திலக் என்ற விரைவு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த ஆண்டு இந்த ரெயில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தற்போது அதை சிறப்பு ரெயிலாக இயக்க, ரெயில்வே நிர்வாகம் முன்வந்தது. அதன்படி மும்பையில் இருந்து கடந்த 17-ந்தேதி புறப்பட்ட இந்த ரெயில், நேற்று முன்தினம் இரவு காரைக்கால் வந்தடைந்தது.

மும்பை பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதையொட்டி அங்கிருந்து வந்த 16 பயணிகளுக்கு, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா உத்தரவின் பேரில், மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில், நோய்தடுப்பு அதிகாரி சேகர் மற்றும் சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News