செய்திகள்
கைது

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 150 பவுன் நகை திருட்டு- வேலைக்கார பெண் கைது

Published On 2021-03-08 17:37 GMT   |   Update On 2021-03-08 17:37 GMT
புதுவையில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் இருந்து 150 பவுன் நகையை வேலைக்காரப் பெண் திருடிச்சென்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:

புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலபிள்ளை வீதியை சேர்ந்தவர் ‌‌ஷகிலா (வயது 51). பிரெஞ்சு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகாத இவர் தனது தந்தை மற்றும் சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ‌‌ஷகிலாவின் தந்தை அ‌‌ஷ்ரப் வீட்டின் மாடியில் தனியாக வசித்து வருகிறார்.

இ்ந்தநிலையில் ராசு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவரது மனைவி இருதய மேரி(38) இவர்களது வீட்டில் வேலை செய்து வந்தார். ‌‌ஷகிலா தனது நகைகளை எல்லாம் வீட்டின் மாடியில் தந்தை அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ‌‌ஷகிலா நகைகளை சரிபார்க்க பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த நெக்லஸ், செயின், கம்மல், தங்க காசுகள், வளையல், மோதிரம் என 150 பவுன் தங்க நகைகளை காணவில்லை. பீரோ உடைக்காமல் நகைகள் மட்டும் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், தங்கள் வீட்டிற்கு வேலைக்கார பெண் தவிர வேறு யாரும் வெளியில் இருந்து வருவதில்லை என்று கூறினர்.

இதனை தொடர்ந்து போலீசார் இருதய மேரியை பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அவர் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.

ஷகிலாவின் வீட்டில் வேலை செய்து வந்த இருதயமேரி மாடியில் உள்ள அறையை சுத்தம் செய்யும் போது அங்கு பீரோவில் நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டார். யாரும் இல்லாத நேரத்தில் அவ்வப்போது ஒவ்வொன்றாக அந்த நகைகளை திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது. மொத்தமாக திருடினால் சிக்கிக் கொள்வோம் என்று கருதி சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் நகைகளை சிறுக சிறுக எடுத்துச் சென்றதும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதைத்தொடர்ந்து போலீசார் இருதயமேரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News