செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2021-02-14 03:48 GMT   |   Update On 2021-02-14 03:48 GMT
புதுவையில் கொரோனா தடுப்பூசி போடு்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. புதுவை அரசு ஆஸ்பத்திரி, மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, ஜிப்மர், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி என 8 இடங்களில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் 100 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தடுப்பூசி போடுவதில் எதிர்பார்த்த அளவுக்கு சுகாதார பணியாளர்களிடையே ஆர்வம் இல்லை. நாளொன்றுக்கு சுமார் 300 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வருகிற 20-ந் தேதிக்குள் சுகாதார பணியாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும். அது குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர்கள் வருகிற 21-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதனால் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதைத்தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 665 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் புதுவையில் 2 ஆயிரத்து 582 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 24 பேர் குணமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News