செய்திகள்
சிவகங்கையில் 5-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியல் - 47 பேர் கைது
சிவகங்கையில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
5-வது நாளான நேற்று சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் வினோத் ராஜா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 47 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.