செய்திகள்
பிடிபட்ட பாம்பு

வில்லியனூர்: 6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது

Published On 2021-02-04 07:42 IST   |   Update On 2021-02-04 07:42:00 IST
வில்லியனூரை அடுத்த உறுவையாறு பகுதியில் தண்ணீர் தொட்டியில் பதுங்கியிருந்த 6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது.
வில்லியனூர்:

வில்லியனூரை அடுத்த உறுவையாறு பகுதியில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறை ஊழியர் கண்ணதாசன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தண்ணீர் தொட்டியில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை பிடித்தனர். அது 6 அடி நீளம் இருந்தது. பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Similar News