செய்திகள்
கைது

வேளாங்கண்ணி அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2021-02-01 18:28 IST   |   Update On 2021-02-01 18:28:00 IST
வேளாங்கண்ணி அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் இளையராஜா (வயது 33) இவர் ஆட்டு கறி வெட்டும் தொழில் செய்துவந்தார்.

சம்பவத்தன்று வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த இளையராஜாவை வழி மறித்து விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உறவினரான சுப்பிரமணியன் மகன் முனியப்பன் (23) மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் அருள் (21) மதி மகன் சுரேஷ்(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பன், அருள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சுரேசை தேடி வந்தனர். இந்த நிலையில் காமேஸ்வரம் கடற்கரை வழியாக சென்னை செல்ல பஸ்சுக்காக சுரேஷ் காத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேசை கைது செய்தனர்.

Similar News