செய்திகள்
வில்லியனூர் அருகே வாலிபர்களை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள அம்மணங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 20). இவர் கடந்த 26-ந் தேதி தனது நண்பர் சசிதரனுடன் சங்கராபரணி ஆற்று பாலத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் 2 பேரையும் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த எழிலரசன், சசிதரன் ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து எழிலரசன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த சஞ்சய், மருதுபாண்டி, ராஜேஷ், பிரசாந்த் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.