செய்திகள்
பாஜக பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசிய காட்சி

புதுச்சேரிக்கு நாராயணசாமி செய்தது இதுதான்... பாஜக பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேச்சு

Published On 2021-01-31 13:45 IST   |   Update On 2021-01-31 13:45:00 IST
புதுச்சேரி ஊழல் இல்லாத மாநிலமாக மாறும் என்றும் தாமரை மலரும் என்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசினார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

கடந்த 35 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், 52 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பதுச்சேரிக்கு 70 சதவீத மானிய உதவி வழங்கப்பட்டது. தற்போது முதல்வராக இருக்கும் நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோது, அந்த மானிய உதவியானது 30 சதவீதமாக குறைந்தது.

நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 5000 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால், புதுச்சேரிக்கு அவர் எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. இந்த மாதிரியான நீதியைத் தான் அவர் புதுவைக்கு வழங்கியிருக்கிறார். இப்போது முதல்வராக இருக்கிறார்.

இங்கே கூடியிருக்கிற உங்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது,  23க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவதற்கான தெளிவான அறிகுறி தென்படுகிறது. புதுச்சேரியில் வளர்ச்சியை காண்பீர்கள். புதுச்சேரி ஊழல் இல்லாத மாநிலமாக இருக்கும். புதுச்சேரி மாறும், தாமரை மலரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News