செய்திகள்
பேத்தை மீன் இறந்து கிடந்த காட்சி.

வேதாரண்யம் கடற்கரையில் விஷதன்மை கொண்ட பேத்தை மீன் இறந்து கரை ஒதுங்கியது

Published On 2021-01-28 13:48 GMT   |   Update On 2021-01-28 13:48 GMT
வேதாரண்யம் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட ஆழ்கடலில் வசிக்கும் பேத்தை மீன் இறந்து கரை ஒதுங்கியது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதியில் கோடியக்கரையில் இருந்து நாலுவேதபதி வரை கடல் சீற்றம், படகுகளில் அடிபடுவது போன்ற காரணங்களால் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை, டால்பின்கள் என கடற்கரையில் இறந்து கரை ஒதுங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் கடல்வாழ் விஷப் பாம்புகள் கூட இறந்து கரை ஒதுங்குவது உண்டு. 

இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட ஆழ்கடலில் வசிக்கும் பேத்தை மீன் இறந்து கரை ஒதுங்கியது. இந்த மீன் ஆபத்து காலத்தில் பந்து போல் மாறும்(முள்ளம்பன்றி போல்) உருமாறும் தன்னை கொண்டது. இதன் உடலில் முட்கள் போன்று இருக்கும். 

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து பேத்தை மீனை பார்த்து சென்றனர்.
Tags:    

Similar News