செய்திகள்
இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
புவனகிரி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). விவசாயி. இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஊர் தலைவராக இருந்தார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பன்னீர்செல்வம் (60) என்பவருக்கும் இடையே கோவில் திருவிழா, ஊர் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 8.5.2005 அன்று வயலுக்கு ஏர் உழவு செய்ய சென்ற கலியமூர்த்தி, அவரது தம்பி மகன் ரவிச்சந்திரன்(25) ஆகிய 2 பேரும் இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் புவனகிரி வெள்ளாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி கலியமூர்த்தி மகன் சாரங்கபாணி, புவனகிரி போலீசில் தன்னுடைய தந்தை மற்றும் சித்தப்பா மகன் ரவிச்சந்திரன் சாவில் மர்மம் உள்ளதாக புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆனால் போலீசார் விசாரணையில் திருப்தி அடையாத சாரங்கபாணி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கினர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோத தகராறில் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பன்னீர்செல்வம், அன்பழகன்(64), ஓய்வுபெற்ற ஆசிரியர் ராகவன், முன்னாள் ராணுவ வீரர் நடராஜன், சிதம்பரத்தை சேர்ந்த இரும்பு ஆறுமுகம் ஆகிய 5 பேரும் சேர்ந்து அவர்கள் 2 பேரையும், முகத்தை மணலில் வைத்து அமுக்கி, மூச்சை திணறடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் இரும்பு ஆறுமுகம் இறந்து விட்டார். இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.
இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தீர்ப்பு கூறினார். அப்போது, இவ்வழக்கில் பன்னீர்செல்வம், அன்பழகன், ராகவன், நடராஜன் ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.7 ஆயிரத்து 400 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றவியல் வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி வாதாடினார்.