செய்திகள்
முதல்வர் நாராயணசாமி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவை சட்டசபையில் தீர்மானம்- சட்ட நகல்களை கிழித்த முதல்வர்

Published On 2021-01-18 09:40 GMT   |   Update On 2021-01-18 09:40 GMT
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தீர்மானத்தை முன்மொழிந்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. 

விவாதத்தின்போது, வேளாண் சட்டங்களின் நகல்களை முதல்வர் நாராயணசாமி கிழித்து எறிந்தார். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்திற்காக மக்கள் அல்ல என சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார். அதன்பின்னர் தொடர்ந்து  விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News