செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2021-01-13 14:33 GMT   |   Update On 2021-01-13 14:33 GMT
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இதையடுத்து, நேற்று முதல் பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமாநதி சேர்வலாறு அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் 60,000 கனஅடி நீர் தாமிரவருணியில் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News