செய்திகள்
மருத்துவ முகாம்

திருக்காடுதுறையில் மருத்துவ பரிசோதனை முகாம்

Published On 2021-01-13 13:46 IST   |   Update On 2021-01-13 13:46:00 IST
கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்:

கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மயில்வாகனன், கார்த்திக், வீரமணி மற்றும் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் குறித்து பரிசோதனை மேற் ண்டனர். பின்னர் சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனையின் அடிப்படையில் சர்க்கரை மாத்திரை, ரத்த அழுத்த மாத்திரை, சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Similar News