செய்திகள்
கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

சத்துணவு திட்டத்தில் கடலை மிட்டாய் சேர்க்க வேண்டும் - உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2021-01-08 19:52 IST   |   Update On 2021-01-08 19:52:00 IST
சத்துணவு திட்டத்தில் கடலை மிட்டாய் சேர்க்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்க சிறப்பு கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. சங்க தலைவர் கார்த்தீஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் கே. கண்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயக்குனர் சந்திரபிரபு, துணை இயக்குனர் அழகர்சாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், கூடுதல் இயக்குனர் ஜெரினாபேபி, பயிற்சியாளர்கள் ராஜ்குமார், சண்முகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், சிறு தொழில் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துராஜ், உறுப்பினர்கள் வேல்ராஜ், சக்தி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது போல், இயற்கை சத்து நிறைந்த கோவில்பட்டி கடலை மிட்டாயையும் சேர்த்து வழங்க வேண்டும்.

புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலைமிட்டாய் தர நிர்ணயம் செய்வதற்கான ஆய்வுக் கூடத்தை கோவில்பட்டியில் அமைத்துத்தர வேண்டும். இயற்கை முறையில் தயார் செய்யப்படும் கடலைமிட்டாய், மற்றும் பாரம்பரியமான சேவு, சீவல், மிக்சர், இனிப்பு பலகாரங்கள் தனித்துவமான உணவு பொருட்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றை தர நிர்ணயம் செய்த உணவுப்பொருள் பட்டியலில் சேர்த்து மீண்டும் மாநில உரிமம் பெறுவதற்கு வழிவகை ெசய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News