செய்திகள்
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மினி கிளினிக்கை திறந்துவைத்து பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய காட்சி

ராஜபாளையம் அருகே மினி கிளினிக் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

Published On 2021-01-03 19:28 IST   |   Update On 2021-01-03 19:28:00 IST
ராஜபாளையம் அருகே அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மினி கிளினிக்கை திறந்துவைத்து பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மினி கிளினிக்கை திறந்துவைத்து பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவதானம் குருசாமி, ஒன்றிய இணைச் செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பேரவை செயலாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணைச்செயலாளர் ராஜ் பிரியம், தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சியார் பட்டி மாரியப்பன், ஒன்றிய இணைச் செயலாளர் சுமதி சமுத்திரம், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், போக்குவரத்து துறை மண்டல பொறுப்பாளர் குருசாமி, ஒன்றிய மாணவரணி பால்பாண்டி, சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், சேத்தூர் கூட்டுறவு சங்கத்தலைவர் பட்டுராஜன், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்கு துரைபாண்டியன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News