செய்திகள்
ராஜவர்மன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை - ராஜவர்மன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2021-01-03 19:24 IST   |   Update On 2021-01-03 19:24:00 IST
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ. ராஜவர்மன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.
சிவகாசி:

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்து பகுதியில் ரத்தினகிரி நகரில் ரூ.5 லட்சம் செலவில் பஸ் நிறுத்தம் அமைக்கவும், ராமசாமி நகரில் ரூ.5 லட்சம் செலவில் நவீன கழிப்பிடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது. 

இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் கவிதா, சமூக ஆர்வலர் பாண்டியராஜன், குருசாமி, சந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பஞ்சாயத்து அலுவலகம் வந்த ராஜவர்மன் எம்.எல்.ஏ. புத்தாண்டை யொட்டி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு காலண்டர்களையும், பொதுமக்களுக்கு இனிப்பையும் வழங்கினார்.

Similar News