செய்திகள்
சேரம்பாடி அருகே பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் 2 காட்டுயானைகள் புகுந்து பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
பந்தலூர்:
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 2 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து ராமசாமி என்பவரது தோட்டத்தில் பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனவர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.