செய்திகள்
புதுவையில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஷீலா பேபி (வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஷீலா பேபி வீட்டில் உள்ள ஒரு அறையில் கதவை மூடிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.