செய்திகள்
சிவகாசி அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
சிவகாசி அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் குருராஜ் (வயது 29). இவருக்கும், பிச்சுப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. குருராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக குருராஜூக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்த அவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள செட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.