செய்திகள்
தற்கொலை

திருமணமான ஓராண்டில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-12-31 14:33 IST   |   Update On 2020-12-31 14:33:00 IST
சிவகாசி அருகே திருமணமான ஓராண்டில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் குருராஜ் (வயது 29 ). இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த குருராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News