செய்திகள்
திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-25 14:30 GMT   |   Update On 2020-12-25 14:30 GMT
கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

கட்சியின் ஆவண மைய மாவட்ட அமைப்பாளர் ராஜா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தையொட்டி நடந்த ஊர்வலத்தை மண்டல செயலாளர் வக்கீல் வேலு குணவேந்தன் தொடங்கி வைத்தார்.நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, கருத்தியல் பிரிவு மாநில துணைச்செயலாளர் அமுதன் துரையரசன் ஆகியோர் ஊர்வலத்தை முடித்து வைத்து பேசினர்.

ஊர்வலத்தை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். அனைவருக்கும் குடி மனைப்பட்டா வழங்க வேண்டும். கடுமையான மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

புயல் மற்றும் கடும் மழை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முடிவில் நகர செயலாளர் ஹாஜா நன்றி கூறினார்.
Tags:    

Similar News