செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

Published On 2020-12-17 09:38 GMT   |   Update On 2020-12-17 09:38 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பாஸ்கரன் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டுச்சான்று மற்றும் கேடயம் வழங்கினார்.

இதைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மொத்தம் 62 பேருக்கு ரூ.26,44,920 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கொத்தங்குளம் குருப்பையா, ராமசாமி, மாரிமுத்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், இணை இயக்குனர்(மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கலுவன், இந்து சமய அறநிலையக்குழு மாவட்டத்தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பொன்.மணிபாஸ்கரன் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.

இதைதொடர்ந்து பொன்.மணி பாஸ்கரன் பதிவேடுகளில் கையெழுத்திட்டு பொறுப்புக்களை ஏற்று கொண்டார்.
Tags:    

Similar News