செய்திகள்
ராஜாதோப்பு அணை நிரம்பி வழிவதை காணலாம்

கே.வி.குப்பம் அருகே ராஜாதோப்பு அணை நிரம்பியது

Published On 2020-12-14 15:43 IST   |   Update On 2020-12-14 15:43:00 IST
கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாதோப்பு அணை நிரம்பி, உபரிநீர் வெளியேறுகிறது.
கே.வி.குப்பம்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மோர்தானா அணைக்கு அடுத்த நிலையில், பெரிய அணையாக கே.வி.குப்பத்தை அடுத்த செஞ்சி ராஜாதோப்பு அணை உள்ளது.

தமிழ்நாடு-ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் மலைப்பாங்கான நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர், மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் வழியே விடப்படும் நீர் ஆகியவை ராஜாதோப்பு அணைக்கு வரும்.

இந்த அணையின் உயரம் 24.57 அடி. கொள்ளளவு 20 மில்லியன் கன அடியாகும். ‘நிவர்’ புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இந்த உபரி நீரும், மலைப்பகுதிகளில் பெய்த மழைநீரும் அணைக்கு வந்ததால் ராஜாதோப்பு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

தற்போது அணையின் மொத்த உயரமான 24.57 அடி தண்ணீர் நிரம்பி நேற்று உபரிநீர் வெளியேறியது. கடந்த 2017-ம் ஆண்டு நிரம்பிய இந்த அணை மீண்டும் தற்போது நிரம்பி வழிகிறது. இந்த அணை நிரம்பி வழிவதை அறிந்த கிராம மக்கள், விவசாயிகள் குடும்பத்தினருடன் அணையை பார்வையிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை நிரம்பி வழிவதை ஆய்வு செய்து, விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Similar News