செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி மூதாட்டி பலி
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரெயில் மோதி பலியானார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமம் குப்பக்காரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி அஞ்சலாட்சி (வயது 65). இவர் சிங்கப் பெருமாள் கோவிலில் உள்ள ஒருவரது வீட்டில் வேலை செய்து விட்டு, தனது வீட்டுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சென்னை எழும்பூரிலிருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.