செய்திகள்
இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள திருவேங்கடம் பஸ் நிறுத்தம் அருகே அண்ணாதுரை மகன் தில்லை முருகன் (வயது 25), நண்பர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் மாட்டு தீவனங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளனர். இரவு கடையிலேயே இருவரும் தங்கி உள்ளனர்.
சம்பவத்தன்று தில்லை முருகன் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று நண்பருடன் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது கடைக்கு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து இளையான்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் அழுபிள்ளை தாங்கி ஊரை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் ரமேஷ்(என்ற) மருதுபாண்டி(24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.