செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் 21-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

Published On 2020-12-13 07:19 GMT   |   Update On 2020-12-13 07:19 GMT
தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி முருகன் வேலூர் ஜெயிலில் 21-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி நளினியுடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்.

தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அரசு தன்னை ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும்.

விடுதலை செய்யாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 21-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.

சிறைக்காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகன் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முருகன் தற்போது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை அவரது மனைவி நளினியுடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி வந்தார். அதற்கும் தற்போது தடை செய்துள்ளனர். தொடர்ந்து முருகனிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News