செய்திகள்
கே.வி.குப்பம் அருகே பொக்லைன் எந்திரம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
கே.வி.குப்பம் அருகே பொக்லைன் எந்திரம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:
குடியாத்தத்தை அடுத்த ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று கீழ் ஆலத்தூர் பகுதியில் உள்ள காட்பாடி ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் திரும்பியபோது அந்த வழியாக திடீரென்று திரும்பிய பொக்லைன் எந்திரம் மோதியது. இதனால், குபேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வன்தார். இந்த நிலைல் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து குபேந்திரன் மனைவி வேண்டாமணி கே.வி.குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.