செய்திகள்
புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:
புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல். தொழிலாளி. இவருடைய மகன் நிவாஸ்(வயது 3). இவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டின் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த பழைய ஓயரை பிடித்ததாக தெரிகிறது.
இதில் மின்சாரம் தாக்கியதில் அவன் தூக்கி எறியப்பட்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.