செய்திகள்
கல்பாக்கத்தில் அடையாளம் தெரியாத பெண் பிணம்
கல்பாக்கத்தில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பு அருகே கடற்கரையோரத்தில் நேற்று காலை 8 மணியளவில் ஒரு பெண் பிணம் கரை ஒதுங்கியது. இதை அறிந்த கல்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அந்த பெண் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். 40 வயது மதிக்கத்தக்க அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இறந்து போன பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.