செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - 65 பேர் கைது

Published On 2020-12-05 15:43 IST   |   Update On 2020-12-05 15:43:00 IST
எருமாடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்தலூர்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பகுதி செயலாளர் ராஜன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட கமிட்டி உறுப்பினர் அமீது, விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் யோகண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிபா உள்பட 65 பேரை கைது செய்தனர்.

Similar News