செய்திகள்
செங்கம் அருகே உள்ள காயம்பட்டு ஏரிக்கு நீர் சென்று கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.

நிவர் புயல் காரணமாக கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

Published On 2020-11-29 09:08 GMT   |   Update On 2020-11-29 09:08 GMT
காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நிவர் புயலுக்கு முன் 20 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தற்போது ஒரே நாளில் 40 அடி உயர்ந்து 60 அடி தண்ணீர் உள்ளது.
கண்ணமங்கலம்:

நிவர் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும் காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நிவர் புயலுக்கு முன் 20 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தற்போது ஒரே நாளில் 40 அடி உயர்ந்து 60 அடி தண்ணீர் உள்ளது. இதேபோல் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குளங்களும் நிரம்பி உள்ளன.

செங்கம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளது. குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் செங்கம் அருகே உள்ள தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு மற்றும் தோக்கவாடி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாக குப்பநத்தம், புதுப்பாளையம், அரட்டவாடி, கரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை பயிர்கள், நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News