செய்திகள்
தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் நாகையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த காட்சி

நாகையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி - தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் நடந்தது

Published On 2020-11-28 07:23 GMT   |   Update On 2020-11-28 07:23 GMT
நாகை புதிய பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் நடந்தது.
நாகப்பட்டினம்:

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினர் நிவர் புயல் பாதுகாப்பு பணிக்காக நாகைக்கு வந்தனர். புயல் கரையை கடந்தாலும் வானிலை ஆய்வு மையம் அடுத்த புயல் உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கியுள்ளனர். 

இந்தநிலையில் இந்த குழுவினர் நேற்று நாகை புதிய பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த மாரிக்கனி தலைமை தாங்கினார். 

இதில் பஸ் பயணிகள், கண்டக்டர்கள், டிரைவர்கள் ஆகியோரிடம் கொரோனா வைரஸ் பரவும் விதம், அதை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், முககவசம் அணிவதன் முக்கியத்துவம், சானிடைசர் பயன்படுத்தும் வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்து கூறினர். மேலும் குழுவினர் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News