கீழ்வேளூரில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூரில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
பதிவு: நவம்பர் 27, 2020 14:29
விபத்து பலி
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வல்லமங்களம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது55). இவர் கீழ்வேளூரில் கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று தனது
மொபட்டில் வீட்டில் இருந்து மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஓடம்போக்கி ஆற்று பாலம் அருகே வந்த போது எதிரே நீலப்பாடி பகுதியை சேர்ந்த அபினேஷ்
என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், ஜெயபால் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு
சிகிச்சை பலனின்றி ஜெயபால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.