செய்திகள்
கோப்புபடம்

நெய்வேலி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-20 12:57 IST   |   Update On 2020-11-20 12:57:00 IST
நெய்வேலி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பெரியசாமி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். நெய்வேலியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மகன் பிரிஜேஷ் (வயது 13). நெய்வேலி இந்திரா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். 

நேற்று வீட்டில் இருந்த பிரிஜேஷ் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தபகுதியில் இடி-மின்னல் சத்தம் கேட்டது. இதைகேட்ட அவனது தாய் சுகுணா இடி-மின்னல் ஏற்படும்போது கம்யூட்டரை அணைக்குமாறு கூறி, மகனை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரிஜேஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News