செய்திகள்
நாகூரில் ஆடு திருட முயன்ற 2 பேர் கைது
நாகையை அடுத்த நாகூரில் ஆடு திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு சொந்தமான ஆடு நேற்று வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆட்டை திருட முயன்றனர். இதையடுத்து கணேஷ், 2 பேரையும் பிடித்து நாகூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகூரை சேர்ந்த முகமது இக்பால் மகன் முகமது நாசிக் (வயது23), திருவாரூர் மாவட்டம் அத்திகடையை சேர்ந்த முகமது உசேன் மகன் சுலைமான் (25) ஆகியோர் என்பதும், கணேஷ் வீட்டு முன்பு நின்ற ஆட்டை திருட முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நாசிக், சுலைமான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.