செய்திகள்
ஊத்தங்கரை அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு
ஊத்தங்கரை அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அந்த நேரம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 5¼ பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இது குறித்து ஆசிரியர் ரமேஷ் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.