செய்திகள்
விபத்து பலி

காவேரிப்பட்டணம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2020-11-17 11:43 IST   |   Update On 2020-11-17 11:43:00 IST
காவேரிப்பட்டணம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் காவேரிப்பட்டணம்-சாப்பரம் சாலையில் தாசம்பட்டி என்ற இடத்தில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News