செய்திகள்
கிணற்றுக்குள் மிதந்த சிறுத்தைப்புலியை கயிறு கட்டி மீட்டனர்

கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தைப்புலி பலி

Published On 2020-11-17 07:36 IST   |   Update On 2020-11-17 07:36:00 IST
கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தைப்புலி இறந்தநிலையில் தண்ணீரில் மிதந்தது. வனத்துறையினர், கிணற்றுக்குள் மிதந்த சிறுத்தைப்புலியை கயிறு கட்டி மீட்டனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகம் அருகே மன்ற குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள கிணற்றுக்கு அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை தண்ணீர் எடுக்க சென்றனர். அப்போது கிணற்றுக்குள் சிறுத்தைப்புலி ஒன்று இறந்தநிலையில் தண்ணீரில் மிதந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், கிணற்றுக்குள் மிதந்த சிறுத்தைப்புலியை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே பகுதியில் எரிக்கப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உயிரிழந்தது 4 வயதான ஆண் சிறுத்தைப்புலி என்றும், இரவு நேரத்தில் உணவு தேடி சென்றபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம்’ என்றனர்.

Similar News