செய்திகள்
விபத்து

கீழ்வேளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2020-11-16 16:55 IST   |   Update On 2020-11-16 16:55:00 IST
கீழ்வேளூர் அருகே சாலையோரத்தில் படுத்துக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வலிவலம் போலீஸ் சரகம் ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி ரோட்டு தெருவை சேர்ந்த ஜீவா மகன் அரவிந்த் (வயது25). இவர் கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தீபாவளி பண்டிகைக்காக தனது சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டவர் கீரங்குடி மெயின் ரோடு பகுதியில் சாலையோரம் தலை வைத்து படுத்துக் கொண்டு செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம், அரவிந்த் மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலிவலம் போலீசார் அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News