செய்திகள்
கோப்புபடம்

எலச்சிபாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-08 16:20 IST   |   Update On 2020-11-08 16:20:00 IST
எலச்சிபாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் அருகே இலுப்புலி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு கயல்விழி (வயது 15), சந்தியா (12) என்ற 2 மகள்கள் இருந்தனர். கயல்விழி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்தநிலையில் இளைய மகள் சந்தியா கடந்த 4 நாட்களாக பேளுக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து வந்தாள். இந்தநிலையில் தன்னையும் பேளுக்குறிச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு தாய் தமிழரசியிடம் மாணவி கூறி வந்தார்.

ஆனால் சில நாட்களுக்கு பிறகு அழைத்து செல்வதாக பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி கயல்விழி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உதவியுடன் மாணவியின் உடலை கீழே இறக்கினர். பின்னர் இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் அருகே இலுப்புலி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு கயல்விழி (வயது 15), சந்தியா (12) என்ற 2 மகள்கள் இருந்தனர். கயல்விழி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்தநிலையில் இளைய மகள் சந்தியா கடந்த 4 நாட்களாக பேளுக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து வந்தாள். இந்தநிலையில் தன்னையும் பேளுக்குறிச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு தாய் தமிழரசியிடம் மாணவி கூறி வந்தார்.

ஆனால் சில நாட்களுக்கு பிறகு அழைத்து செல்வதாக பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி கயல்விழி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உதவியுடன் மாணவியின் உடலை கீழே இறக்கினர். பின்னர் இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News