செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-11-08 12:49 IST   |   Update On 2020-11-08 12:49:00 IST
பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிகள் திறப்பு தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நாளை பாதுகாப்புடன் நடைபெறும். பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று கருத்து தெரிவிக்கலாம்.

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 2,505 பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தொழிற்கல்விகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Similar News