செய்திகள்
சிதம்பரம் அருகே பெண் மானபங்கம்: அண்ணன்-தம்பிகள் 3 பேர் கைது
சிதம்பரம் அருகே பெண்ணை மானபங்கப்படுத்தியதாக அண்ணன் தம்பிகள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள குமரன் மேடு அண்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயவேல் மனைவி ராதா(வயது 35). மீன் வியாபாரி. சம்பவத்தன்று இவர் ராதா குமரன் மேடு பகுதியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவி மகன்கள் பிடல் காஸ்ட்ரோ(24), கன்சிலோ(22), காரல் மார்க்ஸ்(21), ஆகிய 3 பேரும் ராதாவிடம் மீன் வாங்கியபோது திடீரென ராதாவிற்கும், அவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ராதாவை ஆபாசமாக திட்டி தாக்கி, மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.